வவுனியாவில் 95 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்!
18 ஆவணி 2023 வெள்ளி 03:01 | பார்வைகள் : 14878
வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போயுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் விசேட பூசை மற்றும் நிகழ்ச்சியின் பின்னர் பூஜை பானைகள் மற்றும் பழங்கள் ஏலத்தில் விடப்பட்டன.
இதன்போதே, மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த மாம்பழத்தை லண்டனை சேர்ந்த தம்பதியினர் வாங்கிச் சென்றதுடன், பிரசாதம் வழங்கும் பானைகள், பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏலம் விடப்பட்டதோடு, இவ்வளவு தொகைக்கு மாம்பழம் ஏலம் போனது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏலத்தில் பெறப்படும் பணம் ஆலயத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் ஆலயத்தின் தலைவர் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan