யாழில். வீடொன்றின் குளியறையில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
30 சித்திரை 2024 செவ்வாய் 05:15 | பார்வைகள் : 6263
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள், குளியலறையில் சடலமாக இருப்பதை அவதானித்து, அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற மானிப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan