ஓர்லி விமான நிலையத்தில் ஒலி மாசு! - பொதுமக்களுக்கு ஆலோசனை மையம்!
30 சித்திரை 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 17586
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் எழும்பும் ஒலி பெரும் மாசடவை ஏற்படுத்துவதும், இதனால் மக்கள் நீண்டகாலமாக அவதியுறுவதும் அறிந்ததே. இந்நிலையில், இது தொடர்பான ஆலோசனை மையம் ஒன்று நேற்று ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
ஓர்லி விமான நிலையத்தினை சூழ வசிக்கும் மக்களுக்கு ஆற்றுப்படுத்தல் சிகிச்சைகளை வழங்கவும், ஆலோசனைகளை வழங்கவும் இந்த மையம் முனைப்புடன் செயற்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓர்லி, பயணிகளால் நிரம்பி வழியும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக மாதி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் 32.3 மில்லியன் பயணிகள் அதனூடாக பயணித்திருந்தனர். 2035 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 16% சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமான நிலையத்தை சூழ இருக்கும் பயணிகள் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டி நேரும் என்பதால் இந்த ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அத்தோடு இரவு 10 மணியில் இருந்து 11 மணிவரையும் விமான சேவைகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan