யாழில் தாய் பேசவில்லை என்ற மனவிரக்தியில் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு
17 ஆவணி 2023 வியாழன் 09:40 | பார்வைகள் : 15632
தாய் பேசவில்லை என இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து எலிப்பாசனம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் சிலநாட்கள் பேசவில்லை. இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.
இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (15) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தங்கராசா சதீஷ் (வயது 41) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளது.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan