பிள்ளைகளுடன் இருந்த பெண் மீது பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு!!
28 சித்திரை 2024 ஞாயிறு 13:32 | பார்வைகள் : 9945
மார்செய் நகரில் அச்சமூட்டும் சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.
மார்செய்யின் 11 பிராந்தியத்தின் Valbarelle குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கிச்சூடுகள் நடாத்தப்பட்டுள்ளன.
இங்கிருந்த குடியிருப்புக் கட்டடத்தின் நுழைவுப் பகுதியில் இந்தத் துப்பாக்கிச்சூட்டின் குண்டு ஒன்று துளைத்துச் சென்றுள்ளது.
ஆனால் இரண்டாவது குண்டு அந்தக் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு வீட்டின் யன்னல் கண்ணாடியைத் துளைத்துச் சென்று சுவரில் மோதி, செட்டியில் வீழந்துள்ளது.
துப்பாக்கிக் குண்டு துளைத்த வேளை, அதே செட்டியில் ஒரு பெண் தனது 10 மற்றும் 12 வயதுப் பிள்ளைகளுடன் இருந்திருந்துள்ளார். இவர்களின் உயிர் மயிரிழையில் தப்பித்துள்ளது..
இன்னும் இரண்டு குண்டுகள் அருகில் இருந்த குழந்தைகள் காப்பகத்திற்குள்ளும் தாக்கி வீழ்ந்துள்ளன.
உடனடியாக விரைந்த காவற்துறையினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூவரைக் கைது செய்துள்ளனர். இதில் இருவர் 16 வயதுடையவர்கள் என்றும் மூன்றாமவர் 19 வயதுடையவர் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan