சூர்யா 44வது படத்தில் இணைந்த பிரபலங்கள்
30 வைகாசி 2024 வியாழன் 10:44 | பார்வைகள் : 7540
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிய உள்ள ஐந்து டெக்னீசியன்கள் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.
கலை இயக்குனராக ஜாக்சன்: இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ ’அசுரன்’ போன்ற படங்களில் ஏற்கனவே பணிபுரிந்தவர்.காஸ்டியூம் டிசைனர் பிரவீன் ராஜா: இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ படத்தில்’ பணிபுரிந்தவர். அதேபோல் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ படத்தில் பணிபுரிய உள்ளார்.
. ஸ்டண்ட் இயக்குனர் ஜெயிக்கா: இவர் விஜய் நடித்த ’துப்பாக்கி’, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி 2’ மற்றும் ஷாருக்கானின் ’ஜவான்’ போன்ற படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்தவர்.
படத்தொகுப்பாளர் சபிக் முகமது அலி: இவர் ’ஜேடிஎஸ்’ என்ற படத்தில் பணிபுரிந்தவர்.ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா கிருஷ்ணா: இவர் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ மற்றும் மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ உட்பட சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.
மேற்கண்ட 5 தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்பட நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan