கதாநாயகியாகும் வனிதா மகள்..
23 ஆவணி 2023 புதன் 10:27 | பார்வைகள் : 10193
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா ஏற்கனவே விஜய் நடித்த ’சந்திரலேகா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு கதாநாயகி கிடைத்துவிட்டார் என்று கூறியிருந்தனர்
இந்த நிலையில் இதுகுறித்து வனிதா கூறியபோது, ‘எனது மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பது உறுதி, கதைகள் கேட்டு வருகிறோம். எந்த கதாநாயகனுடன் முதலில் நடிப்பது என்பதை விட ஹீரோயினுக்கு நல்ல கதாபாத்திரமும் கதைக்களமும் இருக்கிறதா என்பதை பார்த்து வருகிறோம். விரைவில் எனது மகள் நடிக்கும் சினிமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடங்கும் என்ற கூறினார்.
மேலும் தனது மகள் ஜோவிகா மும்பையில் உள்ள அனுபம்கெர் நடிப்பு பயிற்சி இன்ஸ்டியூட்டில் ஒரு வருடம் படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டியூட்டில் தான் தீபிகா படுகோனே, பிரீத்தி ஜிந்தா, ஹிருத்திக் ரோஷன், வருண் தவான் படித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் இளம் கதாநாயகியாக அறிமுகமாகும் ஜோவிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan