திருமணம் குறித்து விஷால் முக்கிய அறிவிப்பு..!
20 வைகாசி 2024 திங்கள் 14:05 | பார்வைகள் : 12792
நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயது ஆகும் நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் திருமணம் என்று அவர் உறுதியாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி இருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட தனது கடமைகள் அனைத்தும் முடிந்த பின்னர் தான் திருமணம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் அளித்த பேட்டியின் போது விஷால் ’இந்த மூன்று நடிகர்களுக்கும் திருமணம் ஆன பின்னர் தான் எனக்கு திருமணம் என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் குறிப்பிட்ட அந்த மூன்று நடிகர்கள் சல்மான் கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகியோர் ஆகும்.
சல்மான் கானுக்கு இப்போதே 58 வயதாகி விட்டதால் அவர் இனிமேல் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் சிம்புவுக்கு தற்போது 41 வயதாகும் நிலையில் அவரது வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகுந்த பெண் கிடைத்தவுடன் திருமணம் என்று கூறி இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் 44 வயதாகும் பிரபாஸ் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய உறவு உருவாக போவதாக கூறியிருப்பதை அடுத்து அவரது திருமணம் மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் விஷால் மேற்கண்ட 3 நடிகர்களை குறிப்பிட்டதால் அவரது திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan