எலக்சன் கதை நாவலில் இருந்து திருடப்பட்டதா?
20 வைகாசி 2024 திங்கள் 13:52 | பார்வைகள் : 10870
தமிழ் சினிமாவில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராகி, இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக தன்னை முன்னிறுத்தி இருக்கும் நபர் விஜய்குமார். அவரது முதல் படமாக உறியடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய்குமார். 2016-ம் ஆண்டு வெளியான உறியடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறியடி 2-ம் பாகம் வெளியானது. நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்து இருந்தார்.
இதையடுத்து, விஜய் குமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் எலக்சன். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா ரஞ்சித் தயாரித்த சேத்துமான் படத்தை இயக்கியவர் ஆவார். இது அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், எலக்சன் படத்தின் திரைக்கதையை தனது நாவலில் இருந்து எடுத்திருப்பதாக, எழுத்தாளர் கவிப்பித்தன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், எனது மடவளி நாவலுக்கும், இப்படத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் தமிழால் சொல்ல முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan