புற்றுநோய்க்கு பின் மன்னர் சார்லஸின் முதல் வெளிநாட்டுப் பயணம்

18 வைகாசி 2024 சனி 12:38 | பார்வைகள் : 12138
மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என ராணி கமீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது, ஆனால், அவர் ஓய்வே எடுக்கமாட்டேன்கிறார், வேலை செய்துகொண்டேயிருக்கிறார் என சலித்துக்கொண்டார் கமீலா.
அவர் சொன்னது உண்மைதான் என்றே தோன்றுகிறது.
மன்னர் பிரித்தானியாவில் பரபரப்பாக இயங்கிவருவதுடன், தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றிற்கும் திட்டமிட்டுள்ளார்.
புற்றுநோய் கண்டறியப்பட்டபின் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மன்னர் சார்லஸ், பிரான்சுக்குச் செல்ல இருக்கிறார்.
இரண்டாம் உலகப்போரின்போது, 1944ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, மேற்கு ஐரோப்பாவை நாஸி ஜேர்மனியிடமிருந்து விடுவிப்பதற்காக மேற்கத்திய கூட்டணி நாடுகள் பிரான்சின் நார்மண்டி என்னுமிடத்தில் குவிந்தன.
அந்த நாளை நினைவுகூரும் D-Day ceremonies என்னும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத்தான் மன்னர் சார்லஸ் பிரான்ஸ் செல்கிறார்.
அவருடன் ராணி கமீலாவும், இளவரசர் வில்லியமும் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்கள்.
அந்த நாளை நினைவுகூரும் D-Day ceremonies என்னும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத்தான் மன்னர் சார்லஸ் பிரான்ஸ் செல்கிறார்.
அவருடன் ராணி கமீலாவும், இளவரசர் வில்லியமும் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்கள்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1