ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? பதறும் ரசிகர்கள்!
16 வைகாசி 2024 வியாழன் 11:20 | பார்வைகள் : 6271
நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டு போட்ட நிலையில், தனது மகளுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நேற்று இரவு கிளம்பி சென்ற நிலையில், ’ஐஸ்வர்யாவுக்கு கையில் என்ன ஆச்சு?’ என ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் 77வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர். கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பட்டை அலங்கரிக்கும் பிரபலங்களில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ஒருவர்.
வருடாவருடம் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அவருடைய பிரத்யேக உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, தனது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு கிளம்பி சென்றார் ஐஸ்வர்யா ராய்.
அப்போது, கையில் அடிபட்டு கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்த ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர். ‘அச்சச்சோ...ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? அவர் சீக்கிரமே குணமாக வேண்டும்’ என்று இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது நட்பு வட்டாரம் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா, இந்த வருடமும் மிஸ் ஆகக் கூடாது என்பதற்காக கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கிளம்பியிருக்கிறார்.
ஐஸ்வர்யாவுடன் மகள் மட்டுமே வந்திருக்க, கணவர் அபிஷேக் வரவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan