கனடாவில் பிரபல நிறுவனத்தின் உணவுகளில் கொடிய நோய்க்கிருமிகள்...?
16 வைகாசி 2024 வியாழன் 10:03 | பார்வைகள் : 8787
கனடாவில் பிரபல நிறுவனத்தின் நொறுக்குத்தீனிகளில் கொடிய நோய்க்கிருமிகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அவற்றைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கனடாவில், பிரபல நொறுக்குத்தீனி தயாரிப்பு நிறுவனமான Frito Lay Canada நிறுவனத் தயாரிப்பான இரண்டு வகை நொறுக்குத்தீனி பாக்கெட்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் Sunchips Harvest Cheddar Flavoured Multigrain Snacks,மற்றும் Munchies Original Snack Mix என்னும் இரண்டு வகை நொறுக்குத்தீனிகளில் மட்டும் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த இரண்டு தயாரிப்புகளையும் மட்டும் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நொறுக்குத்தீனிகளுக்கு சுவையூட்டுவதற்காக சேர்க்கப்படும் மசாலாவில் சால்மோனெல்லா கிருமிகள் இருப்பதாக மசாலா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மசாலா சேர்க்கப்பட்டுள்ள சிப்ஸ் தயாரிப்புகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக Frito Lay Canada நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாராவது இந்த நொறுக்குத்தீனி வகைகளை வாங்கியிருந்தால், அவற்றை உண்ணவேண்டாம் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan