■ கைதியை ஏற்றிச் சென்ற வாகனம் மீது தாக்குதல் - இருவர் பலி - மூவர் காயம்!
14 வைகாசி 2024 செவ்வாய் 14:47 | பார்வைகள் : 16785
முக்கிய கைதி ஒருவரை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை ஆயுததாரிகள் சிலர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.,
வடமேற்கு பிரான்சின் Eure நகரில் இச்சம்பவம் இன்று மே 14, செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. Evreux சிறைச்சாலை நோக்கி 30 வயதுடைய கைதி ஒருவரை அழைத்துச் சென்றிருந்த போது, திடீரென ஆயுததாரிகள் சிலர் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர்.
இரண்டு வாகனங்களில் வருகை தந்த ஆயுததாரிகள் கறுப்பு நிற ஆடை ஆணிந்து, இயந்திரத்துப்பாக்கிகள் மூலம் சுட்டதாக அறிய முடிகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய குறித்த கைதி தப்பி ஓடியுள்ளார். அவரது பெயர் முகமட் என தெரிவிக்கப்படுகிறது.
அதிரடிப்படையினரான GIGN சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். வீதி முடக்கப்பட்டது. தப்பி ஓடிய கைதி இதுவரை கைது செய்யப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan