தோனிக்கு இது தான் கடைசி IPL சீசனா... ரெய்னா சொன்ன முக்கிய தகவல்
14 வைகாசி 2024 செவ்வாய் 08:28 | பார்வைகள் : 8690
ஐபிஎல் M.S தோனி ஓய்வு குறித்து முன்னாள் சி.எஸ்.கே வீரர் ரெய்னா முக்கிய தகவலை வழங்கியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக விறுவிறுப்பான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, எம்.எஸ். தோனி ஓய்வு குறித்த ஊகங்கள் பரவி வருகின்றன.
42 வயதான இந்திய கிரிக்கெட் legend இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
தொடக்க போட்டிக்கு முன்னதாக அவர் ருதுராஜிடம் தலைமை பதவியை வழங்கினார்.
MA Chidambaram மைதானத்தில் நேற்றைய போட்டி தோனியின் கடைசி போட்டியாக இருக்கும் என்று பலர் கருதினர்.
ஆனால் தோனி மற்றும் அவரது அணியின் சக வீரர்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு கையெழுத்திட்ட பந்துகளை வழங்கினர்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவிடம் சக விளையாட்டு வீரர் ஒருவர் இது தான் சென்னையில் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேட்டதற்கு, " நிச்சயமாக இல்லை! " என்று பதிலளித்தார்.
ரெய்னா மற்றும் தோனி நல்ல நண்பர்கள் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே, மேலும் முன்பு சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே-வுக்கும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெய்னாவின் வார்த்தைகள் ஏராளமான ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது, அவர்கள் அடுத்த வருடமும் தோனியை செயலில் பார்க்க விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan