Neuilly-sur-Seine : பெண் மீது கத்திக்குத்து!
13 வைகாசி 2024 திங்கள் 17:54 | பார்வைகள் : 10676
பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு தாக்குதலுக்கு இலக்கான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இன்று மே 13 ஆம் திகதி திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Place du Général-Gouraud பகுதியில் வைத்து மாலை 5.30 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 43 வயதுடைய பெண் ஒருவர் மூன்று தடவைகள் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது 12 வயது மகன் சம்பவ இடத்தில் இருந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அவர் Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் தேடப்பட்டு வருகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan