எம்பாப்பே கோல் அடித்தும் PSG படுதோல்வி...!
13 வைகாசி 2024 திங்கள் 07:29 | பார்வைகள் : 5168
லிகு1 தொடரில் டௌலௌஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி தோல்வியுற்றது.
Parc des Princes மைதானத்தில் நடந்த லிகு1 போட்டியில் PSG மற்றும் Toulouse அணிகள் மோதின.
ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே PSG நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே அபாரமாக கோல் அடித்தார்.
அதற்கு பதிலடியாய் டௌலௌஸ் வீரர் திஜிஸ் டல்லிங்கா 13வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.
ஆனால் இரண்டாம் பாதியில் டௌலௌஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. 68வது நிமிடத்தில் யான் போஹோவும், 90+5வது நிமிடத்தில் ஃபிராங்க் மக்ரி ஆகியோர் கோல்கள் அடிக்க, டௌலௌஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே UEFA அரையிறுதியில் தோல்வியுற்ற நிலையில், இந்த தோல்வி PSG ரசிகர்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan