துப்பாக்கிச்சூட்டு வன்முறை - உயிராபத்து !
12 வைகாசி 2024 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 9932
கிரனோபிள் நகரின் அல்மா (Alma) குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கி வன்முறை நடந்துள்ளது.
19h30 மணியளவில் அயலவர்களின் தகவலையடுத்து, காவற்துறையினரும் அவசர சிகிச்சைப்பிரிவும் இந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தாலும், இவரது உயிர் பேராபத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு வன்முறையை மேற்கொண்ட எவரும் இன்னமும் கண்டறியப்படவில்லை.
குழுவன்முறைக் குற்றத்தடுப்புச் சிறப்புப் பிரிவிடம் ( Division de la criminalité organisée et spécialisée) இந்த விசாரணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கிரனோபிள் நகரின் இந்த அல்மா குடியிருப்புப் பகுதியானது, பெரும் போதைப்பொருள் விநியொக மையமாகச் செயற்படுகின்றது எனவும், இங்கு தொடர்ந்து குற்றச் செயல்கள் நடைபெருகின்றது எனவும், இந்தச் சிறப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan