பிரேசில் நாட்டில் பெண் மருத்துருக்கு நேர்ந்த கதி...
20 ஆவணி 2023 ஞாயிறு 11:31 | பார்வைகள் : 16824
பிரேசில் நாட்டில் பெண் மருத்துவர் ஒருவரின் நிர்வாண உடல் சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அவரது குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவரின் முகத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளது.
ஸா பாலோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒகஸ்டு 18 ஆம் திகதி ஆம் 28 வயதேயான தல்லிதா பெர்னாண்டஸ் என்ற இளம் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டது.
தல்லிதா திடீரென்று மாயமான நிலையில், அவரது நண்பர்களே பொலிசாருக்கு தகவல் அளித்து, விசாரிக்க கோரியுள்ளனர்.
அவரது குடியிருப்புக்கு சென்ற பொலிசார், சூட்கேசுக்குள் அவரது நிர்வாண உடல் அடைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அவரது காதலன் மார்டின் சில்வா மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மதியத்திற்குமேல் 4.15 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பொலிசார், குளியலறையில் இரத்தக்கறை படிந்திருப்பதை கவனித்துள்ளனர்.
படுக்கையறையிலும் ரத்தக்கறை காணப்பட்டுள்ளது. மேலும், அந்த அறையும் பூட்டப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மருத்துவர் தல்லிதாவின் நிர்வாண சடலம் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
தல்லிதாவின் காதலனை விசாரணைக்காக தொடர்புகொள்ள முயன்ற பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மேலும், மருத்துவர் தல்லிதாவை தொடர்புகொண்ட ஒருவருக்கு, வேலைப்பழு அதிகமாக உள்ளது, இப்போது பதிலளிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவரது குறுந்தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய நாள் அவர் பணிக்கு செல்லவில்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு முன் காலையில் சண்டை சத்தம் குறித்து அக்கம்பக்கத்தினர் புகார் செய்ததாக கட்டிடத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த குடியிருப்பில் இருந்து மருத்துவரின் காதலன் தனியாக புறப்பட்டு சென்றதையும் நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan