பரிஸ் : மகிழுந்துக்குள் குழந்தையை வைத்து பூட்டிவிட்டுச் சென்ற பெண் கைது!
12 வைகாசி 2024 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 9166
பெண் ஒருவர் அவரது குழந்தையை மகிழுந்துக்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். தீயணைப்பு படையினர் மகிழுந்து கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டனர்.
நேற்று மும்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Boulevard de Grenelle பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து, அங்கு வசிப்பவம் பிற்பகல் 4 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
விரைந்து வந்த அவர்கள், மகிழுந்துக்குள் பொருத்தப்பட்டிருந்த குழந்தைகள் அமரும் இருக்கையில் வைத்து இடுப்பு பட்டி அணிந்த நிலையில் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்துள்ளது.
உடனடியாக மகிழுந்து கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்டனர்.. குழந்தை ஒருமணிநேரத்துக்கும் அதிகமாம மகிழுந்துக்குள் இருந்ததாகவும், மூச்சுத்திணறலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan