Paristamil Navigation Paristamil advert login

22 நாட்களின் பின்னர் திறக்கப்பட்ட A13 நெடுஞ்சாலை!

22 நாட்களின் பின்னர் திறக்கப்பட்ட A13 நெடுஞ்சாலை!

10 வைகாசி 2024 வெள்ளி 13:22 | பார்வைகள் : 8161


கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு முதல் மூடப்பட்டிருந்த A13 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, இன்று மே 10 ஆம் திகதி 22 நாட்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. எனினும் province-Paris பகுதி நோக்கிய பகுதி மட்டுமே திறக்கப்படுவதாகவும், முழுமையான வீதி திறக்கப்படுவதற்கு ஜூன் மாதம் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கனரக வாகனங்கள் பயணிக்கவும் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தமை அறிந்ததே. அதன் பின்னர் திருத்தப்பணிகள் இடம்பெற்று வீதி மீண்டும் இன்று திறக்கப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்