எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ஆப்பிள் Event - என்னென்ன எதிர்பார்க்கலாம்?

10 வைகாசி 2024 வெள்ளி 08:52 | பார்வைகள் : 5043
ஆப்பிள் நிறுவனத்தின் லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை உலகம் முழுக்க பார்வையாளர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தபடி நேரலையில் பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கிறது.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதய ஐபேட் ப்ரோ மாடல்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ப்ரோ ஆகும். இரு மாடல்களும் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இவற்றில் ஸ்கிரீனை சுற்றி மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஐபேட் சாதனங்களில் முதல்முறையாக இரு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது.
புதிய ஐபேட் மாடல்களில் M4 பிராசஸர் வழங்கப்படும் என தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும், M3 பிராசஸர் கூட வழங்கப்படலாம்.
இதைத் தொடர்ந்து இரண்டு ஐபேட் ஏர் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இவை 10.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இவற்றுடன் ஹேப்டிக் ஃபீட்பேக் மற்றும் புது வசதிகளை வழங்கும் ஆப்பிள் பென்சில் மற்றும் மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
புதிய சாதனங்கள் வரிசையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த புது அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1