€100 யூரோக்கள் விலைக்கழிவு வழங்கும் TotalEnergies !
7 சித்திரை 2024 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 13181
பிரான்சின் மிகப்பெரிய எண்ணை வழங்குனர்களான TotalEnergies, தனது வாடிக்கையாளர்களுக்கு 100 யூரோக்கள் மதிப்புள்ள விலைக்கழிவு வவுச்சர்களை ( un bon ) வழங்க உள்ளது.
பிரான்சில் TotalEnergies நிறுவனம் கால்பதித்து 100 ஆண்டுகள் ஆன நிலையில், அதனைக் கொண்டாடும் முகமாக இந்த 100 யூரோக்கள் கொடுப்பனவினை அந்நிறுவனம் வழங்க உள்ளது.
இதற்கென சில நிபந்தனைகளை TotalEnergies அறிவித்துள்ளது.
அங்கத்தவர் அட்டை (carte Club de TotalEnergies) வைத்திருக்கும் ஒருவர், மார்ச் 29 ஆம் திகதியில் இருந்து டிம்சம்பர் 31, 2024 ஆம் திகதிக்குள்1,000 யூரோக்களுக்கு எரிபொருள் வாங்கியிருக்கவேண்டும்.
அதுவும் பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் (France métropolitaine) மட்டுமே அதனை வாங்கியிருக்கவேண்டும்.
அப்படி 1,000 யூரோக்கள் நீங்கள் எரிபொருள் (அனைத்துவிதமான டீசல் மற்றும் பெற்றோல் வகைகளும் இதில் அடங்கும்) வாங்கியிருந்தால், உங்களுக்கு 100 யூரோக்கள் பெறுமதியுள்ள வவுச்சர் வழங்கப்படும்.
முதல் 100,000 பேருக்கு இந்த வவுச்சர்கள் வழங்கப்பட உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan