Seine-et-Marne : போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கையின் போது - பாரிய ஆயுதங்கள் மீட்பு!!
6 சித்திரை 2024 சனி 07:45 | பார்வைகள் : 16164
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றின் போது, பாரிய அளவு ஆயுதங்கள், பெருமளவு பணம், போதைப்பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. Seine-et-Marne மாவட்டத்தின் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை Avon (Seine-et-Marne) நகரில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர். அதன்போது வீடொன்றுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 11 வெடிகுண்டுகள், ரைஃபிள் வகை துப்பாக்கிகள், தானியங்கி பிஸ்ட்டல் வகை துப்பாக்கிகள், €210,000 யூரோக்கள் பணம், 65 கிலோ கஞ்சா போதைப்பொருள் போன்றவற்றை கைப்பற்றினர்.
அதேவேளை, சம்பவ இடத்தில் இருந்து எவரையும் கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவந்த விசாரணைகளை அடுத்தே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan