Guyancourt : துப்பாக்கிச்சூடு!
6 சித்திரை 2024 சனி 07:00 | பார்வைகள் : 21531
நேற்று ஏப்ரல் 5 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை Guyancourt (Yvelines) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சத்தம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிற்பகல் 3 மணி அளவில் place Cendrillon பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றபோது அங்கு, துப்பாக்கிசூடுக்கு இலக்கான எவரையும் காணமுடியவில்லை. அதேவேளை, இரும்பு கம்பி ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவரை காவல்துறையினர் மீட்டனர்.
துப்பாக்கிச்சூடு முழக்கம் கேட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது. அப்பகுதியில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றிருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே பகுதியில், 48 மணிநேரங்களுக்கு முன்னதாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஒருவர் மகிழுந்து சாரதி ஒருவரை துப்பாக்கியில் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan