யாழில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாணவன்

13 ஆவணி 2023 ஞாயிறு 08:23 | பார்வைகள் : 10078
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் தென்மராட்சி, சாவகச்சேரி பகுதியில் இன்று 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தில் யாழ்.இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1