உணவகம் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! - மயிரிழையில் உயிர்தப்பிய சிறுவன்!
5 சித்திரை 2024 வெள்ளி 11:16 | பார்வைகள் : 10761
உணவகம் ஒன்றினை நோக்கி இடம்பெற்ற சரமாரி துப்பாக்கிச்சூட்டு சம்ப்பவத்தின் சிறுவன் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். Guyancourt (Yvelines) நகரில் இச்சம்பவம் ஏப்ரல் 3, புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு Pont du Routoir பகுதியில் உள்ள துரித உணவம் ஒன்றுக்கு இரவும் 9.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், உணவகத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
காவல்துறையினருக்கு எச்சரிக்கப்பட்டு அவர்கள் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தினை ஆராய்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து இருபத்தைந்து வரையான 45mm கலிபர் வகை துப்பாக்கி சன்னங்களை கண்டெடுத்தனர்.
இத்துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை. அதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டினால் சிறுவன் ஒருவன் அதிஷ்ட்டவசமாக தப்பியுள்ள சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. உணவகம் நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகளில் சில, அருகில் உள்ள கட்டிடத்தின் ஜன்னல்களிலும் பாய்ந்துள்ளது.
சிறுவன் ஒருவர் வீட்டின் உள்ளே இருந்த நிலையில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. இச்சம்பவத்தில் சிறுவன் அதிஷ்ட்டவசமாக தப்பித்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan