இலங்கையை வந்தடைந்த முருகன் , பயஸ் மற்றும் ஜெயக்குமார்
3 சித்திரை 2024 புதன் 13:02 | பார்வைகள் : 15899
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, முப்பத்தி மூன்று வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நேற்றிரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இன்று புதன்கிழமை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்த நிலையில் குறித்த மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் முப்பத்தி மூன்று வருடங்களின் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் மூவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால் , அவர்கள் அவர்களின் உறவினர்களுடன் இணைக்கப்பட்டனர். ஏனைய நால்வர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சுமார் ஒன்றை வருட காலமாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நால்வரில் சாந்தன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார்.
எஞ்சிய மூவரையும் உயிருடன், உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தங்கள் ஏற்பட்டமையால், மூவரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு ஏதுவாக சகல நாட்டிற்குமான கடவுசீட்டினை வழங்குமாறு மூவரும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் , இலங்கை செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு , இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டள்ளனர்.
குறித்த மூவரும் தற்போதுவரை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துச்செல்லச் சென்ற உறவுகள் இவர்களின் வருகைக்காக காத்துநிற்கின்றனர்.
அதேவேளை சிறப்பு முகாம் என்பது , சிறைச்சாலையை விட மிக கொடுமையானது என சாந்தனின் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த தமிழக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan