”chèques énergie” - 5.6 மில்லியன் குடும்பங்களுக்கு இன்று முதல் விநியோகம்!
2 சித்திரை 2024 செவ்வாய் 18:10 | பார்வைகள் : 17972
குறைந்த வருமானங்களை ஈட்டும் குடும்பங்களுக்கு, மின்சாரம், எரிவாயு போன்ற பயன்பாடுகளுக்காக அரசு தரப்பில் கொடுப்பனவுகள் ‘ chèques énergie ' வழங்கப்பட உள்ளன. இன்று ஏப்ரல் 2 செவ்வாய்க்கிழமை முதல் அதற்குரிய காசோலைகள் விநியோகிக்கப்பட உள்ளன.
5.6 மில்லியன் குடும்பங்களுக்கு 48 யூரோக்கள் முதல் 277 யூரோக்கள் வரை கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.
ஆண்டு வருமானம் மற்றும் குடும்ப அங்கத்தவர்களை கொண்டு இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே உள்ளன.
இந்த காசோலையானது இன்று ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள்ளாக விநியோகப்படும். அதேவேளை காசோலைகளை 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan