வாடகை மகிழுந்து கட்டணங்கள் உயர்வு!

28 பங்குனி 2024 வியாழன் 16:05 | பார்வைகள் : 15844
வாடகை மகிழுந்துகளுக்கான குறைந்தபட்சக்கட்டணம் ஒன்பது யூரோக்களாக உயர்வடைந்துள்ளது.
VTC வாடகை மகிழுந்துகளுக்கான கட்டணம் மட்டுமே உயர்வடைந்துள்ளது. இதுவரை குறைந்தபட்ச கட்டணமாக 7.65 யூரோக்கள் அறவிடப்பட்ட நிலையில், மார்ச் 25 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து இந்த கட்டணம் 9 யூரோக்களாக உயர்வடைந்துள்ளது. அதேவேளை ஒருமணிநேர பயணத்துக்கான கட்டணம் 30 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து உத்தியோகபூர்வமாக மார்ச் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு, எரிபொருட்கள் மற்றும் குறைந்த மாசடைவு வாகனங்களுக்காக செலவு போன்றவை அதிகரித்துள்ளதை அடுத்து இந்த கட்டணம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1