'மறுமலர்ச்சி' - பிரேஸில் பயணமாகியுள்ள ஜனாதிபதி மக்ரோன்!

28 பங்குனி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 12378
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரேஸிலுக்கு பயணமாகியுள்ளார். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் முகமாக இந்த பயணம் அமைந்துள்ளது.
பிரேஸிலின் Sao Paulo பகுதியில் பிரெஞ்சு மக்கள் வசிக்கும் 'குட்டி பரிஸ்' இருப்பது அறிந்ததே. ஜனாதிபதி மக்ரோன் தனது முதல் நாள் பயணத்யின் போது அங்கு சென்று மக்களைச் சந்தித்தார். 'பிரேசிலுடனான நட்பு மறுமலர்ச்சி அடைந்துள்ளது!' என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.
முன்னதாக 2019-2022), ஆண்டுகளில் தீவிர வலதுசாரியான Jair Bolsonaro பிரேஸில் ஜனாதிபதியாக இருந்தார். அதன்போது பிரான்சுக்குள் பிரேசிலுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பிரேசில் பிரான்சுடன் கை கோர்த்துள்ளதையே 'மறுமலர்ச்சி' என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
ரஃபேல் போர் விமானங்கள் விற்பனை, சட்டவிரோதமாக தங்கம் தோண்டும் பணிகளை தடுத்து நிறுத்துதல், அதேவேளை கடல்மார்க்கமான சட்டவிரோத பயணங்கள், French Guiana தீவு தொடர்பான விடயங்கள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1