ஹமாஸ் அமைப்பின் கோரிக்கை மறுத்த அமெரிக்கா...
28 பங்குனி 2024 வியாழன் 05:48 | பார்வைகள் : 8538
காசாவில் உணவுப் பற்றாக்குறையால் தவித்துவரும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக விமானங்களில் இருந்து பரசூட் மூலம் உதவிப்பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.
பரசூட் மூலம் வழங்கப்படும் உணவுப் பொதிகளை பெறுவதற்கான முயற்சிகளில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பரசூட் மூலம் பொதிகளை இறக்குவதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலாக, தரை வழியாக அதிகளவு விநியோகங்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் கோரியுள்ளது.
வான் வழியான விநியோகம் என்பது காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கா கையாளும் வழிகளில் ஒன்று எனவும், அதை அமெரிக்கா தொடரும் எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதியின் பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan