பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல்
27 பங்குனி 2024 புதன் 10:43 | பார்வைகள் : 7745
பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஐந்து சீன பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன பிரஜைகள் பயணித்த வாகனத்தொடரணி மீதுதற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதலை மேற்கொண்டார் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கைபர் பக்துன்வா மாகாணத்தின் டசுவில் உள்ள தங்கள் முகாமிற்கு இஸ்லாமபாத்திலிருந்து சீன பொறியியலாளர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அவ்வேளை தற்கொலை குண்டுதாரி தனது வாகனத்தை அவர்களின் வாகனத்தை நோக்கி செலுத்தி வெடிக்கவைத்தார் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐந்து சீன பிரஜைகளும் அவர்களின் வாகனச்சாரதியான பாக்கிஸ்தான் பிரஜையும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாசு என்பது முக்கியமான நீர்மின்நிலையத்திற்கான அணையாகும்.
இதனை சீன நிறுவனம் உருவாக்கிவருகின்றது இதேவேளை இந்த பகுதியில் கடந்த காலங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
2021 இல் பேருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 சீன பிரஜைகள் கொல்லப்பட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan