Seine-et-Marne : மரத்தில் மோதிய மகிழுந்து - ஒருவர் பலி!
27 பங்குனி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 12740
மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதை அடுத்து, மகிழுந்தைச் செலுத்திய 59 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மார்ச் 25 ஆம் திகதி, திங்கட்கிழமை இச்சம்பவம் Vert-Saint-Denis (Seine-et-Marne) நகரின் அருகே உள்ள D306 சாலையில் இடம்பெற்றுள்ளது. காலை 10 மணி அளவில் குறித்த நபர் மகிழுந்தில் பயணித்துள்ளார்.
சில நிமிடங்களிலேயே மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்தது. வீதியை விட்டு அகன்று சென்று அருகில் இருந்த மரத்தில் பலமாக மோதி நொருங்கியது. சில நிமிடங்களில் மகிழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீயணைப்பு படையினருக்கு எச்சரித்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னர் நிலமை கைமீறிச் சென்றது. அவர் பலியான நிலையில், அவரது சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
Draveil (Essonne) நகரைச் சேர்ந்த அவர், 1964 ஆம் ஆண்டு பிறந்த 59 வயதுடையவர் எனவும், சம்பவத்தின் போது இருக்கைப் பட்டி (ceinture de sécurité) அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan