மகிழுந்துடன் மோதி - ஜொந்தாம் வீரர் பலி!

27 சித்திரை 2024 சனி 07:00 | பார்வைகள் : 12946
மகிழுந்து ஒன்றுடன் மோதி, ஜொந்தாம் வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Bayeux (Calvados) நகரில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஜொந்தாம் வீரர் ஒருவரே பலியாகியுள்ளார். RN 13 நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஜொந்தாம் வீரர்கள் சிலர், மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணிப்பதை பார்த்துள்ளனர். அதனை தடுத்து நிறுத்த முற்பட்டும், அத்ய் நிற்காமல் தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளது.
அதையடுத்து, ஜொந்தாம் வீரர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றுள்ளார். அதன்போது Saint-Loup-Hors அருகே பிற்பகல் 4 மணி அளவில் விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் குறித்த வீரர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஜொந்தாம் படைப்பிவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு உளநல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஜொந்தாம் வீரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1