Gennevilliers : யூத பெண் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு, கொலை மிரட்டல் - சந்தேகநபர் கைது!
24 சித்திரை 2024 புதன் 13:21 | பார்வைகள் : 11666
யூத பெண் ஒருவரைக் கடத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Gennevilliers (Hauts-de-Seine) நகரில் வைத்து ஏப்ரல் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய யூத பெண் ஒருவரை 30 வயதுடைய ஒருவர் கடத்தியுள்ளார். காலை 11 மணி அளவில் குறித்த பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
இருவருக்கும் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரைச் சந்திக்கச் சென்ற இடத்தில் அப்பெண் கடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் இரவு முழுவதும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு, அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கட்டுள்ளது. அவரைக் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan