ஹாசிகாவுக்காக சிம்பு இத்தனை கோடி செலவு செய்தாரா?
24 சித்திரை 2024 புதன் 12:14 | பார்வைகள் : 6162
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையாளராக அறியப்படும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் தான் சிம்பு.
குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய தந்தை இயக்கிய பல படஙக்ளில் நடித்துள்ள சிம்பு... பருவ வயதை எட்டியதும் 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இவரின் டான்ஸ் மற்றும் விரல் விதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
முட்டியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சமீப காலமாக ஹெவியாக டான்ஸ் ஆடுவதை சிம்பு குறைத்து கொண்டார் சிம்பு. இவர் எந்த அளவுக்கு மிகவும் பிரபலமே... அதே அளவுக்கு இவர் ஒரு சர்ச்சையான நடிகர் என்றும் கூறலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து அவருடன் பிரேக் அப், இதை தொடர்ந்து நயன்தாராவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் பெருக்கெடுத்து ஓட, திருமணம் வரை சென்று ஜாதகம் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் இவர்களின் காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து வாலு படத்தில் நடிக்கும் போது நடிகை ஹன்சிகாவை காதலிக்க துவங்கினார். இரண்டே மாதத்தில் இந்த காதலும் முடிவுக்கு வந்தது. அதற்கான காரணத்தை சிம்பு - ஹன்சிகா இருவருமே கூறவில்லை. ஆனால் ஹன்சிகா தன்னுடைய திருமண வீடியோவில் சிம்பு உடனான காதல் குறித்து பேசும் போது, தன்னுடைய முதல் காதலை மறக்க 10 வருடங்களுக்கு மேல் ஆனது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
சிம்பு - ஹன்சிகா காதல் விவகாரம் தற்போது ஓய்ந்து விட்டாலும், சிம்பு ஹாசிகாவுக்கு இரண்டே மாதத்தில் சுமார் 6 கோடி வரை செலவு செய்ததாக, கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இது குறித்தோ, ஹன்சிகா பற்றியோ தவறாக ஒரு இடத்தில் கூட சிம்பு பேசியது இல்லை என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள், இதை இருந்தே அவரின் நல்ல குணம் வெளிப்படுவதாக தெரிவித்து வருகிறார்கள். 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சிம்பு... இந்த வருடமாவது திருமண வாழ்க்கையில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan