குருவாயூர் கோயிலில் காதலரைக் கரம் பிடித்தார் நடிகை அபர்ணாதாஸ்
24 சித்திரை 2024 புதன் 06:00 | பார்வைகள் : 6200
’டாடா’ படப்புகழ் நடிகை அபர்ணாதாஸ் தனது காதலரை இன்று காலை கேரள மாநிலம் குருவாயூரில் கோயிலில் கரம் பிடித்தார். திருமண புகைப்படங்களை தம்பதியர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர, மணமக்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் தீபக் பரம்போல். இவரை காதலித்து கரம் பிடித்து இருக்கிறார் நடிகை அபர்ணாதாஸ். இவர் தமிழில் ‘பீஸ்ட்’, ‘டாடா’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இந்த ஜோடியின் திருமணம் இன்று காலை குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. கேரள முறைப்படி, எளிமையாக கோயிலில் இவர்களது திருமணம் நடந்தது.
நேற்று நலங்கு, சங்கீத் என இவர்களது திருமண கொண்டாட்டங்களும் களைகட்டியது. கருப்பு நிற உடையில் சங்கீத் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டு மகிழ்ந்திருக்கிறார் அபர்ணா.
அபர்ணாதாஸ்- தீபக் பரம்போல் இருவரும் ‘மனோஹரம்’ என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு, காதலாகி இப்போது திருமணமும் முடிந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan