திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! - மணமகன் கைது!
23 சித்திரை 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 10255
திருமண கொண்டாட்டம் ஒன்று சிக்கலில் சென்று முடிவடைந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை Bouafle (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. அன்று காலை திருமணத்தை முடித்துக்கொண்டு தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் BMW மகிழுந்தில் பயணித்த மணமகன், உற்சாக மிகுதியில் துப்பாக்கி ஒன்றை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.
Avenue de l'Europe வீதியில் இத்துப்பாக்கி முழக்கம் கேட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இறுதியாக rue de Flins வீதியில் வைத்து குறித்த புதிதாக திருமணமான மணமகன் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை என்றபோதும், அச்சுறுத்தலாக விளங்கியதாக தெரிவிக்கப்பட்டு விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan