மகனின் அறையில் காணப்பட்ட பெண்ணின் சடலம்! அதிர்ச்சியில் தாய்
16 ஆவணி 2023 புதன் 09:14 | பார்வைகள் : 11116
அமெரிக்காவில் மகனின் அறையில் இளம்பெண்ணின் உடல் பிளாஸ்டிக்-ல் சுற்றப்பட்டு கிடப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின் தாய் உடனடியாக அவசர காவல்துறை அழைப்பான 911க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அறையில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து மகனின் அறைக்குள் தாய் உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே மனித உடல் ஒன்று பிளாஸ்டிக்-ஆல் சுற்றப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக பொலிஸாருக்கு தாய் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிளாஸ்டிக்-ல் சுற்றப்பட்டு கிடப்பதை உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு மருத்துவ குழு வரவழைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளங்கள் மற்றும் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
இந் நிலையில், பெண்ணின் உடல் எத்தனை நாட்களாக அறையில் இருந்தது என்பதும் தெளிவாக தெரியவில்லை.
அதே நேரம் இறப்பிற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரியவில்லை.
இதற்கிடையில் இந்த கொலையில் சந்தேகிக்கப்படும் இளைஞர் 26 வயதுடைய என்றும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவரை பொலஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan