காதல் தனிமை
22 சித்திரை 2024 திங்கள் 13:54 | பார்வைகள் : 6432
காற்றிலாடும் கருங்குழல் கண்டு
நாணியோடும் கார்மேகங்கள்
உனைக் கண்ட சேதிசொல்ல...
மாரன் மயங்கும் மலர் கணைகள்
பிறக்கும் வேல் விழிகள்
காண விரைந்தோடி வந்தேன்...
பொன்னொளி வீசும் பொன்னணி
திலகம் தரித்த பிறைநுதல்
நெஞ்சை அள்ளிக்கொள்ள...
செவ்வான நிறமெடுத்து
தீந்தேன் தான்கலந்த செவ்விதழ்கள்
உணர்ச்சி பிழம்பை சோதிக்க...
கடலமிழ்தம் பொங்கும்
நங்கை மேனி
தாவி அணைத்தேன்...
தலையணை கையில்வர
கண்திறந்தேன்
வெறுமைக் கட்டில்..!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan