விலைமாதுக்களை தாக்கி பணம் பறிந்த - சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது!
20 சித்திரை 2024 சனி 17:26 | பார்வைகள் : 19021
விலைமாதுக்களை தாக்கி அவர்களிடம் இருந்து பணம் பறிந்த ஐவர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் மூவர் 17 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது சம்பவம் நேற்று ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை Grigny (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. 16 தொடக்கம் 19 வயதுடைய குறித்த ஐவரும், திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும், வன்முறையை பயன்படுத்தி கொள்ளையிட்டதும் என இரு வழக்குகள் அவர்கள் மீது பதியப்பட்டுள்ளது.
மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வீதிகளில் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் விலைமாதுக்களை தாக்கி அவர்களிடம் இருந்து பணம், தொலைபேசிகளை பறித்துச் சென்றுள்ளனர்.
மார்ச் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரையா குறுகிய நாட்களில் மேற்படி கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan