உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் முயற்சி - ஒருவர் கைது!
19 சித்திரை 2024 வெள்ளி 05:05 | பார்வைகள் : 12570
உள்துறை அமைச்சர் Gérald Darmanin மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஏப்ரல் 18 ஆம் திகதி வியாழக்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin பிரெஞ்சு கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Guadeloupe இற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு Pointe-à-Pitre நகரில் உள்ள 1ère எனும் உள்ளூர் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்க தயாரானபோது, நபர் ஒருவர் உள்துறை அமைச்சர் மீது பாய்ந்துள்ளார்.
அவரை இறுக பற்றிக்கொண்டு தள்ளிவிட முயன்றுள்ளார். அதற்குள்ளாக மெய்பாதுகாவலர்கள் அவரைப் பிடித்து அமைச்சரைக் காப்பாற்றியுள்ளனர்.
இதில் அமைச்சர் காயமடையவில்லை. தாக்குதலுக்கு முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தீவின் Pointe-à-Pitre நகரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளை அடுத்து, 6 மணியின் பின்னர் அங்கு சிறுவர்களுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan