Noisy-le-Sec : தொடருந்தில் பயணித்த ஒருவர் பலி!

18 சித்திரை 2024 வியாழன் 17:36 | பார்வைகள் : 10499
இன்று ஏப்ரல் 18 ஆம் திகதி வியாழக்கிழமை RER E தொடருந்தில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்.
Noisy-le-Sec (Seine-Saint-Denis) தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் காலை 7.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. தொடருந்தில் பயணித்த ஒருவர் திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகி மரணமடைடைந்துள்ளார்.
அதையடுத்து மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு சில முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மரணமடைந்ததை மருத்துவக்குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவத்தினால் போக்குவரத்து தடைப்பட்டது. முற்பகல் 11 மணி அளவில் மீண்டும் சேவைகள் ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1