Argenteuil : மிதிவண்டி சாரதி மகிழுந்து மோதி பலி!
18 சித்திரை 2024 வியாழன் 13:26 | பார்வைகள் : 18577
மகிழுந்துடன் மோதி மிதிவண்டி சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று ஏப்ரல் 17 ஆம் திகதி புதன்கிழமை இச்சம்பவம் Argenteuil (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது.
RD311 சாலையில் இரவு 10 மணி அளவில் மிதிவண்டி ஒன்றில் பயணித்த 59 வயதுடைய ஒருவரை அதே திசையில் வந்த மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 11 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan