▶ பாடசாலை அதிபர் மீது தாக்குதல்! - இரு பெண்கள் கைது!
18 சித்திரை 2024 வியாழன் 08:53 | பார்வைகள் : 10502
மார்செய் (Marseille) நகரில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அதே பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவரது சகோதரியும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 15 ஆம் திகதி, திங்கட்கிழமை இத்தாக்குதல் மார்செயின் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள La Millière எனும் உயர்கல்வி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. அப்பாடசாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா ஒன்றில் மாணவி ஒருவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் திங்கட்கிழமை காலை இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது.
பாடசாலை அதிபர் குறித்த மாணவியின் குடும்பத்தினை அழைத்து விளக்கம் கோரிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
அதையடுத்து குறித்த இருவரும் பாடசாலை அதிபரை தாக்கியுள்ளனர்.
அதையடுத்து அங்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். தாக்குதல் மேற்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிபருக்கு ஐந்து நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan