வாடகை மிதிவண்டிகளின் கட்டணம் அதிகரிப்பு!

17 சித்திரை 2024 புதன் 13:12 | பார்வைகள் : 9747
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் பொது போக்குவரத்துக்களுக்கான கட்டணம் அதிகரிப்புக்கு உள்ளாகிறது. இந்நிலையில், வாடகை மிதிவண்டி சேவைகளின் கட்டணமும் அதிகரிப்புக்கு உள்ளாகிறது.
பரிசில் வாடகை மிதிவண்டிகள் வழங்குனர்களில் மிக முக்கிய நிறுவனமான 'Lime', தங்களுடைய கட்டணங்களை அதிகரித்துள்ளது. அதன்படி, €0.28 சதங்களாக இருந்த ஒரு நிமிடத்துக்கான கட்டணம், விரைவில் €0.32 சதங்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
அதேபோல் மணிநேரங்களுக்கான கட்டணமும், மாதாந்த கட்டணங்களும் அதிகரிக்கப்பட உள்ளது.
அதேவேளை, இந்த ஒலிம்பிக் காலத்தின் போது மேலதிகமாக 5,000 மிதிவண்டிகளை சேவைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1