சிட்னியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது வன்முறை - பலர் படுகாயம்
15 சித்திரை 2024 திங்கள் 11:59 | பார்வைகள் : 7827
சிட்னியில் கிறிஸ்தவதேவலாயமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
மார் மரி இமானுவெல் என்ற ஆயர் ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் அவரை நோக்கி பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் அங்கு காணப்பட்டவர்கள் மீதும் அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan