அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் அவசியமாகிறது contrôle technique.
15 சித்திரை 2024 திங்கள் 08:47 | பார்வைகள் : 17688
பிரான்சில் ஏப்ரல் 15ம் திகதி முதல் இரு சக்கர மோட்டார் சைக்கிள் அனைத்துக்கும் (contrôle technique) தொழில்நுட்ப ஆய்வுகள் கட்டாயமாக்கப்படுகிறது.
15 ஏப்ரல் 2017க்கு முன் புழக்கத்தில் இருக்கும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் இன்றிலிருந்து ஓகஸ்ட் 14ம் திகதிக்குள் தொழில்நுட்ப ஆய்வுக்கு (contrôle technique) உட்படுத்த வேண்டும்.
அதேபோல் ஏப்ரல் 15, 2017க்குப் பின்னர் புழக்கத்தில் இருக்கும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் இன்றிலிருந்து வரும் டிசம்பர் 31, 2024 முன்னர் தொழில்நுட்ப ஆய்வுக்கு (contrôle technique) உட்படுத்த வேண்டும்.
இரு சக்கர மோட்டார் வாகனம் ஜனவரி 1, 2017 க்கும் டிசம்பர் 31, 2019 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதன் தொழில்நுட்ப ஆய்வு (contrôle technique) 2025 இல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது இறுதியாக 2026 ஆகும். , ஜனவரி 1, 2022க்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு, "புழக்கத்திற்கு வந்த 4 மற்றும் 5 ஆண்டுகளுக்குள்" தொழில்நுட்ப ஆய்வு நடைபெற வேண்டும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan