இலங்கையழல் பிரசவத்தின்போது கீழே வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிசு
14 ஆவணி 2023 திங்கள் 11:02 | பார்வைகள் : 14755
சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவான மற்றுமொரு சந்தர்ப்பத்தில், மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைப் பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த துயரத்தை சந்தித்துள்ளார்.
பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் சிசுவைப் பிடிக்க முடியாமல் அது தரையில் வீழ்ந்துவிட்டதாக சிசுவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரேதப் பரிசோதனையில் சிசு கீழே வீழ்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.
சிசுவின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan