கொல்லப்பட்ட கல்லூரி மாணவனிற்கு இறுதி அஞ்சலி!! பாலியல் படுகொலை!!
9 சித்திரை 2024 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 11514
கொல்லப்பட்ட கல்லூரி மாணவனிற்கு இறுதி அஞ்சலி!! பாலியல் படுகொலை!!
எசொன் மாவட்டத்திலுள்ள வித்ரி சத்தியோனனில் (Viry-Châtillon - Essonne) வன்முறையால் கொல்லப்பட்ட சம்சுதீன் (Shemseddine) எனும் 15 வயதுச் சிறுவனின் இறுதி யாத்திரை இன்று நடைபெறுகின்றது.

இந்த இளைஞனிற்கான அமைதி ஊர்வலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என இப்பகுதியின் மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளளார்.
சம்சுதீன் கொலேஜ் முன்னறலில் பலரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மறுநாள் சாடைந்துள்ளார்.
தாக்குதலை நடாத்த ஏற்பாடு செய்தவரஇகளிற்கும் தாக்குதலில் சாவடைந்த மாணவனிற்கும் இடையில் ஒரு சகோதரியின் தொடர்பாக ஏற்பட்ட பிணக்கே கொலை வரை சென்றுள்ளது என நீதித்துறை தெரிவித்துள்ளது.
தனது தங்கையுடன் பலர் தொலைபேசியில் பாலியல் கதைகள் கதைத்ததாகவும், குடும்ப கௌவரத்திற்காக தமையன்மார் இருவரும் பலரை எச்சரித்ததாகவும், மற்றவர்கள் நிறுத்தினாலும் சம்சுதீன் தொடர்ந்து கதைதத்தாலேலேயே, அவர் தாக்க்பபட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
ஆனால் தங்கை தனது விருப்பத்தின் பேரிலேயே சம்சுதீனுடன் கதைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டாலும் ஒரு 20 வயதுடையவரும், இன்னொரு பதின்ம வயதுடையவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றைய இருவரும் தற்காலிகத் தடுப்பில் உள்ளனர் எனவும் சட்டப்பிரதிநிதி தெரவித்துள்ளார.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan